இந்தியா

அதானி வழக்கு: திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

அதானி - ஹிண்டன் பா்க் விவகாரம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. 

DIN

அதானி - ஹிண்டன் பா்க் விவகாரம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. 

பங்குகளின் விலையை மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவின் பங்கு ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பா்க் குற்றம்சாட்டியது. இதனால் அதானி பங்குகள் கடுமையாக சரிந்தன.

இந்த விவகாரத்தில் பங்குச் சந்தை முதலீட்டாளா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

கடந்த மாா்ச் 2-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்த நிபுணா்கள் குழு அமைத்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம். சாப்ரே தலைமையில் 6 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தில் செபி மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிபுணா்கள் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 மாத காலம் அவகாசம் வழங்குவது என்பது தற்போதைய சூழலில் முடியாத ஒன்று என்று கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம் வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT