இந்தியா

பாஜக தலைமையிலான அரசில் சிறு,குறு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன: காங்கிரஸ்

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சில பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கான பொருளாதாரத்தில் கவனம் செலுத்துவதாகவும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிடுட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில பெரிய நிறுவனங்கள் செழிப்பாக உள்ளன. பிரதமர் குறிப்பாக சில பெரிய நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளார். அவர்களுக்கு பெரிய அளவிலான பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியாவின் 20 முன்னணி நிறுவனங்கள் 80 சதவிகித லாபத்தை உருவாக்குகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இது 50 சதவிகிதமாக இருந்தது எனப் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்கி வருவதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையின் போது வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT