புது தில்லி: கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னதாக தென்னாப்பிரிக்காவில் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் எழுப்பும் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
காங்கிரஸ் அளித்திருக்கும் புகாரானது ஆதாரமற்றது, உண்மையில்லாதது என்று என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
நாட்டில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒருபோதும் தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பப்படவில்லை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் இந்தக் குற்றச்சாட்டு மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கர்நாடக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் இந்திய மின்னணு கழகத்தின் ஹைதராபாத் ஆலையில் தயாரிக்கப்பட்ட புத்தம் புது இயந்திரங்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள 224 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.