இந்தியா

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது?

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து பொதுத் தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. 

DIN


புது தில்லி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து பொதுத் தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. 

தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 87.33 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 5 சதவீகிதம் குறைவாகும்.

இந்த ஆண்டு முதல் முறையாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது சிபிஎஸ்இ நிர்வாகம். அதேவேளையில், நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளான 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அடுத்து 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 21,86,940 பேர் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துள்ளனர். 

கடந்த ஆண்டு, ஒரே நாளில் காலையில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவும், மதியம் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவும் வெளியானதைப் போல இந்த ஆண்டும் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே வேளையில், மே 15ஆம் தேதிக்குப் பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என்று கல்வி வாரியத்தின் செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்திருந்ததால், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவும் மே 15ஆம் தேதிக்குப் பிறகு வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT