இந்தியா

சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு!

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தார். 

DIN

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தார். 

கர்நாடக பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 117, பாஜக-73, மஜத -29, பிற கட்சிகள்- 5 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

இந்நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில், சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேல்பூரி

11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

வண்ணமலர்கள் ஆறு!

கோலிவுட் ஸ்டூடியோ!

SCROLL FOR NEXT