இந்தியா

ரூ.100 கோடியை நெருங்கும் தி கேரளா ஸ்டோரி திரைப்பட வசூல்!

DIN

பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்பட வசூலில் இந்த வார இறுதியில் ரூ.100 கோடியை எட்டும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மே 5-ம் தேதி வெளியாளது. 

சுதீப்தோ சென் இயக்கத்தில் பல மொழிகளில் உருவான இந்தத் திரைப்படம், கேரளத்தைச் சோ்ந்த பெண்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக கதைப் பின்னணி கொண்டுள்ளது.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் இப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று மேற்கு வங்கத்தில் வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் அம்மாநிலம் முழுவதும் இப்படம் திரையிடலை நிறுத்தியது. 

பிரதமர் மோடி இப்படத்திற்குப் பாராட்டு தெரிவித்ததைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் இந்த திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவித்துள்ளது. 

ஆனால், பலவித தடைகளையும் மீறி இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூலில் பெரும் சாதனை படைத்து வருவது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

படம் தொடங்கிய முதல் நாளில் ரூ.8.03 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.11.22 கோடி, மூன்றாவது நாளில் ரூ.16.4 கோடி, 4வது நாளில் ரூ.10.07 கோடி, 5வது நாளில் 11.14 கோடி, 6வது நாளில் ரூ.12 கோடி, 7வது நாளில் 12.5 கோடி, 8வது நாளில் 12.50 கோடி என மொத்தம் இதுவரை ரூ93.86 கோடி வசூலித்துள்ளது. 

இந்நிலையில், இந்த வார இறுதிக்குள் இப்படம் ரூ.100 கோடியை எட்டிவிடும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT