பயங்கரவாதத்துக்கு நிதி: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ அதிரடி சோதனை!
பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்புல்வாமா, சோபியான், புட்ஹம் ஆகிய மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உள்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மே 11 ஆம் தேதியும் இது தொடர்பாக பாராமுல்லா, புட்ஹம் ஆகிய மாவட்டங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனால் ஜம்மு-காஷ்மீரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.