இந்தியா

அவதூறு வழக்கு: கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் நோட்டீஸ்

அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

DIN

அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்ற நிலையில் விரைவில் ஆட்சியமைக்க உள்ளது. முன்னதாக காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் 'பயங்கரவாத அமைப்புகளான பிஎப்ஐ, பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம்' என்று குறிப்பிட்டிருந்தது. இதற்கு பாஜக, விஹெச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. 

இந்நிலையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த பி.எப்.ஐ. அமைப்புடன் பஜ்ரங் தள அமைப்பை தொடர்புப்படுத்தி பேசியதாக ஹிந்து சுரக்ஷா பரிஷத் நிறுவனர் ஹிதேஷ் பரத்வாஜ், மல்லிகார்ஜூன கார்கே மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். மேலும் கார்கே இழப்பீடாக ரூ. 100 கோடி தர வேண்டும் என்று கோரியுள்ளார். 

பஞ்சாபின் சங்ரூர் நீதிமன்றம் இந்த வழக்கை இன்று விசாரித்த நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டு கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT