முகப்பு
இந்தியா

கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம்: தமிழகப் பாரம்பரிய உடையில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு

கேன்ஸ் 76-ஆவது திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்ச் ரிவியராவில் சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்புடன் புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

கேன்ஸ் 76-ஆவது திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்ச் ரிவியராவில் சர்வதேச நட்சத்திரங்கள் பங்கேற்புடன் புதன்கிழமை தொடங்கியது.
சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக பாரம்பரிய அடையாளமான வேஷ்டி- சட்டை அணிந்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.
அவருடன் "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட புகழ் திரைப்படத் தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் பங்கேற்றார்.
இது குறித்து மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ்ப் பாரம்பரிய அடையாளமான வேஷ்டி- சட்டை அணிந்து பங்கேற்பதில் ஒரு தமிழனாய் பெருமிதம் கொள்கிறேன்.
ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள இந்த தருணத்தில் ஜி20 இந்திய சின்னம், நமது தேசியக்கொடி பொறித்த பாரம்பரிய ஆடையை அணிந்து உலக அரங்கில் அடியெடுத்து வைப்பது ஒவ்வொரு இந்தியருக்கும், தமிழருக்கும் பெருமிதமான தருணமாகிறது என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரங்கையும் அவர் தொடங்கி வைத்தார்.


 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.