இந்தியா

பிரதமர் மோடியுடன் ஜடேஜா சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜாவும் நேற்று சந்தித்தனர்.

DIN

பிரதமர் நரேந்திர மோடியை இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவியும் பாஜக எம்எல்ஏவுமான ரிவாபா ஜடேஜாவும் நேற்று சந்தித்தனர்.

தில்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் படத்தை பகிர்ந்துள்ள ஜடேஜா, “உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தாய்நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் கடினமாக உழைப்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அனைவரையும் தொடர்ந்து ஊக்கவிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

ஜடேஜாவின் இந்த பதிவை பகிர்ந்துள்ள மோடி, “உங்களையும் ரிவாபாவையும் சந்தித்தது மிகவும் அற்புதமானது. நாங்கள் பல தலைப்புகளில் சிறந்த உரையாடல் நடத்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் ஜாம்நகர் தொகுதியில் கடந்தாண்டு போட்டியிட்ட ரிவாபா ஜடேஜா வெற்றி பெற்றார். இவருக்கு ரவீந்திர ஜடேஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்: வைகோ நடவடிக்கை

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு யுபிஎஸ்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

காஜிப்பூா் பால் பண்ணை கோயில் வளாக சட்டவிரோத கடைகள் அகற்றம்: டியுஸ்ஐபி நடவடிக்கை

SCROLL FOR NEXT