100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!
நாடு முழுவதும் 100 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புதன்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் 100 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புதன்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதைப் பொருள்கள் கடத்தல் கும்பல், தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய 5 வழக்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை வாட்ஸ்அப் மூலம் பெறலாம்!
ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களிலும் காவல்துறையினர் உதவியுடன் 100 இடங்களில் 200 என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.