இந்தியா

ராகுல் காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு!

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சித்தராமையா பேசி வருகிறார். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நிலவுகிறது. 

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 

நேற்று முன்தினம்(திங்கள்) சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தில்லியில் சந்தித்துப் பேசிய நிலையில், நேற்று(செவ்வாய்க்கிழமை) டி.கே.சிவகுமார் தில்லி சென்றார். 

இந்நிலையில் இன்று ஆலோசனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சித்தராமையாவுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். டி.கே.சிவகுமாரும் தற்போது தில்லியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கார்கேவிடம் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கர்நாடக முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

SCROLL FOR NEXT