இந்தியா

ஐடிசி நிகர லாபம் 22.66 சதவீதம் உயர்வு

ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 22.66 சதவீதம் அதிகரித்து ரூ.5,225.02 கோடியாக அதிகரித்துள்ளது.

DIN

புதுதில்லி: ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 22.66 சதவீதம் அதிகரித்து ரூ.5,225.02 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,259.68 கோடியாக இருந்தது என்று ஐடிசி லிமிடெட் தெரிவித்துள்ளது.

செயல்பாடுகள் மூலம் திரட்டப்பட்ட வருவாய் ரூ.19,058.29 கோடியாக இருந்தது, இது 2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.17,754.02 கோடியாக இருந்தது. மொத்த செலவினங்கள் ரூ.12,632.29 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.12,907.84 கோடியானது.

மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.19,427.68 கோடியாக இருந்தது. இது 2022ம் நிதியாண்டில் ரூ.15,485.65 கோடியாக இருந்தது.

2023ம் நிதியாண்டில் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய வருவாய் ரூ.65,204.96 கோடியிலிருந்து ரூ.76,518.21 கோடியாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT