இந்தியா

ஜோ பைடனை கட்டியணைத்து வரவேற்ற மோடி!

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கட்டியணைத்து ஒருவரையொருவர் வரவேற்றுக்கொண்டனர். 

DIN

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கட்டியணைத்து ஒருவரையொருவர் வரவேற்றுக்கொண்டனர். 

வளா்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் மே 19 தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததன்பேரில் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஹிரோஷிமாவுக்கு வருகை புரிந்தார். மாநாடு நடைபெறும் அரங்கத்துக்கு வந்த ஜோ பைடனை வரவேற்கும் விதமாக அவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

அவரின் கையைப் பிடித்து பேசிவிட்டு பின்னர்,  ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவிடம் பைடன் சென்றார். 

அரங்கத்தில் பல நாடுகளின் தலைவர்கள் அமர்ந்திருந்த நிலையில், ஜோ பைடன், நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தானா? ஐபிஎல் புதிய விதியால் வீரர்களுக்கு சிக்கல்!

மினி ஏலத்துக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்பிய பதிரானா! சிஎஸ்கே அணிக்கு மீண்டும் வருவாரா?

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம்! மக்களவையில் மசோதா தாக்கல்!

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் கடத்தல்!

SCROLL FOR NEXT