முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான ஹெச்.டி.தேவெகெளடாவை நேரில் சந்தித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசினார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து பெங்களூருவில் கண்டீரவா மைதானத்தில் சனிக்கிழமை பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதில் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் அதைத் தொடர்ந்து 8 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், மதச்சாா்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் தேவெகெளடாவை, அவரது இல்லத்தில் சிவகுமார் சந்தித்து பேசினார்.
முன்னதாக பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மையை இன்று நேரில் சந்தித்து சிவக்குமார் பேசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.