முகப்பு
இந்தியா

 சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஜூன் 1 வரை நீட்டிப்பு

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:59 PM
பகிர்:

தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் தொடர்புடைய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் ஜூன் 1-ஆம் தேதி வரை நீட்டித்து ரெளஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
 அவரது நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில், ரெளஸ் அவென்யூ நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
 சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
 அவர் சிறையில் படிப்பதற்கு ஏதுவாக மேஜை, இருக்கை, புத்தகங்கள் வழங்கவும், வழக்குரைஞரை அவர் சந்திக்க அனுமதிக்கவும் சிறை நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.