கோப்புப்படம் 
இந்தியா

ரூ. 2,000 நோட்டுகள் அஞ்சல் நிலையங்களில் மாற்றப்படுமா?

அஞ்சல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

DIN

அஞ்சல் நிலையங்களில் ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. அதன்படி, வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை இன்றுமுதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம்.

இந்நிலையில், அஞ்சல் நிலைய கணக்குகளில் ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படாது என்றும், வங்கிகளில் மட்டுமே ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் சேமிப்புக் கணக்கில் ரூ.2,000 நோட்டுகளை செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து நாளொன்றுக்கு ஒருவர் ரூ.20,000 வரை சில்லறை மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 

மேலும், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்க வேண்டாம் என்றும், நோட்டுகளை மாற்ற போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, பேருந்துகளில் டிக்கெட் எடுப்பதற்கு, ரயில்வே நிலையங்களில் கவுன்டர்களில் டிக்கெட் எடுப்பதற்கு, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு, ரயில்வே உணவகங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட சேவைககளுக்கு ரூ.2,000 நோட்டுகள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

கூடலூரை அடுத்த அரசு பள்ளி மாணவிக்கு மலேசியாவில் பொறியியல் படிக்க வாய்ப்பு

பனியில் இருந்து ரோஜா மலா்களை காக்க பசுமைக்குடிலில் பராமரிக்கப்படும் செடிகள்

பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதா் கோயிலில் நகைகள் மாயம்?: விசாரணை நடத்த பாஜக கோரிக்கை

சீரான குடிநீா் விநியோகம் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT