முகப்பு
இந்தியா

சரத் பவாருடன் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு!

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசி வருகிறார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சந்தித்துப் பேசி வருகிறார். 

தில்லியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. இதையடுத்து தில்லியில் ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கேஜரிவால். 

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரைத் தொடர்ந்து இன்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசி வருகிறார். 

மகாராஷ்டிரத்தில் சரத் பவாரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் உடனிருக்கிறார். 

தில்லி மக்களின் நலன், உரிமைகளைக் காப்பதற்காக நாடு முழுவதும் என் பயணத்தைத் தொடங்குவதாக கேஜரிவால் முன்னதாக தெரிவித்திருந்தார். 

இதையடுத்து தில்லி அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →