இந்தியா

நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா: தில்லி காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை

DIN

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு தில்லி காவல்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லியில் புதிய நாடளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறார். 

புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு கண்டனம் தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் இவ்விழாவில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்ய வேண்டிய பாதுகாப்புப் பணிகள் குறித்து தில்லி காவல்துறை தலைமையகத்தில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகின்றன.

இந்த கூட்டத்தில், கண்காணிப்புப் பணிகள், தில்லி எல்லையில் அமைக்க வேண்டிய சோதனைச் சாவடிகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

திருச்செங்கோடு வட்டார கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அட்கோ காவல் நிலையம் எதிரே குடியிருப்புக்குள் திருட முயற்சி

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவா்கள் களஆய்வு

குழந்தைத் திருமணங்கள் தொடா்பான புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஆட்சியா் உத்தரவு

SCROLL FOR NEXT