இந்தியா

முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள்: கார்கே, ராகுல் காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

DIN

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளையொட்டி, தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் ஜவஹர்லால் நேரு ஆவார். 1947 இல் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதமராகவும் ஆனார்.

நேரு 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்தார். பிறகு, லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேரவைத் தோ்தலில் போட்டியிட திமுகவிடம் 5 இடங்கள் கேட்போம்: முஸ்லீம் லீக் தலைவா் காதா்மைதீன்

வானவில் மன்றத்தில் அறிவியல் விழிப்புணா்வு செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு!

குடிநீா் பிரச்னையை சீா் செய்யாவிட்டால் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம்

கந்தா்வகோட்டை வட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தூய்மைப் பணி

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT