இந்தியா

அவசரச் சட்டம் பிறப்பித்ததன் மூலம் தில்லி மக்களை மத்திய அரசு அவமதித்துள்ளது: சந்திரசேகர் ராவ்

அவசரச் சட்டம் பிறப்பித்ததன் மூலம் தில்லி மக்களை மத்திய அரசு அவமதித்துள்ளது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

DIN

அவசரச் சட்டம் பிறப்பித்ததன் மூலம் தில்லி மக்களை மத்திய அரசு அவமதித்துள்ளது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே நிா்வாக அதிகாரங்கள் உள்ளது என கடந்த மே 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால், மீண்டும் தில்லி துணை நிலை ஆளுநருக்கே ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட சேவைகள் தொடா்பான நிா்வாக அதிகாரங்களை வழங்கிடும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

இந்த அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் பாஜகவால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் தடுக்கும் முழு முனைப்பில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது. இதற்காக, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அனைத்து எதிா்க்கட்சிகளையும் அவரச சட்டத்திற்கு எதிராக ஒன்று திரட்டும் முயற்சியில் களமிறங்கியுள்ளாா்.

நிதீஷ் குமாா், மம்தா பானா்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவாா் உள்ளிட்ட எதிா்க்கட்சி தலைவா்களை ஏற்கெனவே சந்தித்து ஆதரவு கோரியுள்ள அரவிந்த் கேஜரிவால் இன்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவை ஹைதராபாத்தில் சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது பஞ்சாப் முதல்வர் உடன் இருந்தார். பின்னர் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த அவசரச் சட்டத்தை பிரதமர் மோடி தாமாக முன்வந்து திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். 

தேவையில்லாமல் பிரச்னை செய்ய வேண்டாம். தில்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படட்டும். அவசரச் சட்டம் பிறப்பித்ததன் மூலம் தில்லி மக்களை மோடி அரசு அவமதித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மோடி அரசு மதிக்கவில்லை. இந்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால், நாட்டின் கதி என்னவாகும்? நாட்டை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்கள்.

எமர்ஜென்சியை நோக்கிய பயணம். உண்மையில் இது எமர்ஜென்சியை விட மோசமானது. மத்திய அரசு புத்திசாலித்தனமாக வந்து அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். கர்நாடக மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு பாடம் புகட்டினார்கள். அதேபோல் மற்ற மாநில மக்களும் பாடம் புகட்டுவார்கள். பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் மத்திய அரசு பல்வேறு வழிகளில் பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT