இந்தியா

பணிவும் நன்றியுணர்வும் நிறைந்திருக்கிறது: ஆட்சிப்பொறுப்பேற்று 9ஆம் ஆண்டு நிறைவில் பிரதமர் மோடி

மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

DIN


புது தில்லி: மக்களின் வாழ்வை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதை ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறது என்று, மத்திய அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இன்று, நாட்டுக்காக சேவை செய்யத் தொடங்கி 9 ஆண்டுகள் நிறைவடைகிறது, பணிவும் நன்றியுணர்வும் நிறைந்து நிற்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அனைத்து முடிவுகளும், அனைத்து நடவடிக்கைளும் எடுக்கப்பட்டதெல்லாமே, மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையிலேயே. இன்னமும் மேம்பட்ட இந்தியாவை உருவாக்க இதைவிடவும் இன்னமும் கடினமாக தொடர்ந்து ஊழைப்போம் என்றும் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறப்பிட்டுள்ளார்.

மத்திய அரசில் ஆட்சியமைத்து 9 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இன்று முதல் பாஜக சார்பில் மாதம் முழுக்க பேரணி நடைபெறவிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT