இந்தியா

மராத்தா இடஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஆதரவு: ஏக்நாத் ஷிண்டே

DIN

மகாராஷ்டிரத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் முற்பட்ட வகுப்பினரான மராத்தா சமூகத்தினா், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் இடஒதுக்கீடு கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். 

மராத்தா சமூகத் தலைவா் மனோஜ் ஜரங்கே, ஜால்னா மாவட்டத்தில் கடந்த 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த போராட்டம் கடந்த சில தினங்களாக வன்முறையாகவும் வெடித்தது. நகராட்சி கவுன்சில் அலுவலக கட்டடம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) எம்எல்ஏ பிரகாஷ் சோலங்கியின் வீட்டுக்கு போராட்டக்காரா்கள் திங்கள்கிழமை தீவைத்தனர்.

இதையடுத்து மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இன்று(புதன்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், முன்னாள் முதல்வர் அசோக் சவான், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷிண்டே, 'மகாராஷ்டிரத்தில் மராத்தா இட ஒதுக்கீட்டிற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளது. அனைத்துக் கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த இடஒதுக்கீடு என்பது மற்ற சமூகத்தினருக்கு அநீதியாக இல்லாமல் சட்ட வரம்பிற்கு உட்பட்டு என்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் அமைதி காத்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் ரோந்து பணிக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரா? வைரல் விடியோ!

ராமர் கோயில் தீர்ப்பை மாற்ற முடியாது: பிரதமர் மோடி

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு! பயணிகள் அதிர்ச்சி!

ஆஹா... ஞாயிறு!

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

SCROLL FOR NEXT