முகப்பு
இந்தியா

மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி எம்எல்ஏக்கள் போராட்டம்

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் தெற்கு மும்பையில் உள்ள மாநில தலைமைச் செயலகத்துக்கு வெளியே வியாழக்கிழமை

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வலியுறுத்தி மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளும் மற்றும் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் தெற்கு மும்பையில் உள்ள மாநில தலைமைச் செயலகத்துக்கு வெளியே வியாழக்கிழமை 2-ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தலைமைச் செயலக நுழைவு வாயிலுக்கு அருகே கூடிய ஆளும் பாஜக, சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸின் இரு பிரிவுகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த எம்எல்ஏக்கள், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி கோஷங்களை எழுப்பினா்.

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் அந்தச் சமூகத்தின் தலைவா் மனோஜ் ஜரங்கே, அரசியல் கட்சியினா் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்குமாறு மக்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக வன்முறைகள் ஏற்பட்டன. அமைச்சா், எம்எல்ஏ உள்பட அரசியல் கட்சித் தலைவா்களின் வீடுகளை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற மாவட்டங்களில் ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டு, இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →