சியோனியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நில அதிர்வு மையத்தின் வலைத்தளத்தில், மதியம் 12.55 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று கூடுதல் ஆட்சியர் சி.எல்.சானாப் தெரிவித்துள்ளார்.