முகப்பு
இந்தியா

ஜல் ஜீவன் மிஷன் ஊழல்: ராஜஸ்தானில் 25 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ராஜஸ்தானில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

ஜல் ஜீவன் மிஷன் ஊழல் தொடர்பான பணமோசடி விசாரணையில் ராஜஸ்தானில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜல் ஜீவன் மிஷன் எனப்படும் வீடுகளுக்கு குடிநீந்ர குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக ராஜஸ்தானில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

மாநில தலைநகர் ஜெய்ப்பூர் மற்றும் தௌசாவில் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மோசடியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளின் இடங்களையும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றது. 

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →