முகப்பு
இந்தியா

வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 40% குறைவு!

வடகிழக்குப் பருவமழை 40 சதவீதம் இயல்பை விடக் குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:16 AM
பகிர்:

வடகிழக்குப் பருவமழை 40 சதவீதம் இயல்பை விடக் குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாலச்சந்திரன் கூறியது, 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. 

123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 40 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. அக்.1 முதல் நவ.3 வரை மொத்தம் 116.9 மிமீ அதாவது 12 செ.மீ பதிவாகியுள்ளது. 

இயல்பு மழையின் அளவு 193.7(மி.மீ) இயல்பிலிருந்து வேறுபாடு 40 சதவீதம் ஆகும். 

கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் அதிகளவிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் அதிக மழை பதிவாகியுள்ளது. 

இன்று(நவ,3) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், 

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி,ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும்  விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு(நவ.4,5) கன முதல் மிகக் கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →