இந்தியா

மகாராஷ்டிர மருந்து ஆலையில் தீ விபத்து: 7 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

DIN

மகாராஷ்டிரத்தில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். 

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று(சனிக்கிழமை) காலை 7 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் காயமடைந்த நிலையில் இதுவரை 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. 

குறைந்த மின்னழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT