இந்தியா

நேபாளத்தில் நிலநடுக்கம்: 72 பேர் பலி

DIN

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கம், இந்தியாவிலும் பல இடங்களில் உணரப்பட்டது. இதேபோன்று சீன எல்லைகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 30 நாட்களில் மூன்றாவது முறையாக நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று (நவ.3) இரவு 11.32 மணியளவில் நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மலைப்பிரதேசங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை காலை 7 மணி நிலவரப்படி 72ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT