கேரளத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் மூன்று மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளத்தின் மூன்று மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை தொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரளத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பத்தனம்திட்டா, இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மாலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறன்று ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், மாலப்புறம், வயநாடு, கன்னூர் மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் நவ.4 முதல் 8 வரை ஓரிரு இடங்களில் கனமழைக்கும், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்னியாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்து வருகிறது. அடுத்த 6 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.