பூடான் மன்னருடன் ஜெய்சங்கர் 
இந்தியா

பூடான் மன்னரை வரவேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணமாக வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே வாங்சுக்கை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

DIN

இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், ஞாயிற்றுக்கிழமை புது தில்லி வந்தடைந்தார். அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார்.

பூடான் மன்னரின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "மாட்சிமை பொருந்திய பூடான் மன்னர் புதுதில்லி வந்தடைந்தவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவரை அன்புடன் வரவேற்றார். பூடான் மன்னரின் இந்த வருகை இந்தியாவின் மதிப்புமிக்க கூட்டாளருடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.

பூடான் மன்னர் ஜிக்மே வாங்சுக் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, பூடான் மன்னர் தனது 8 நாள் இந்தியப் பயணத்தை அசாமில் இருந்து வெள்ளிக்கிழமை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT