இந்தியா

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு! பீதியில் மக்கள்

DIN

நேபாளத்தில் இன்று(திங்கள்கிழமை) மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் தில்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும் சேதமும் ஏற்பட்டுள்ளது. 

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் தில்லியில் சில பகுதிகளில் உணரப்பட்டது. 

இதன் தொடர்ச்சியாக இன்று (திங்கள்கிழமை) மாலை 4.16 மணியளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது தில்லியில் ஒரு சில பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 

அதுபோல வாராணசி, பாட்னா, குருகிராம், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சண்டீகரில் மணீஷ் திவாரி வேட்புமனு தாக்கல்!

நாய்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!

சென்னை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு தனிவழி: கைவிட இப்படி ஒரு காரணமா?

வால்பாறை சாலையில் ஒற்றைக் காட்டு யானை: வைரல் விடியோ!

குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

SCROLL FOR NEXT