இந்தியா

திகார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம்? - விசாரணைக் குழு அமைப்பு

DIN

தில்லியில் உள்ள திஹார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 

தில்லியில் உள்ள திஹார் சிறையில் அறை எண் 7-ல் உள்ள கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகவும், சில கூடுதல் வசதிகள் வழங்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் இதுதொடர்பாக துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பெனிவால் இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் விசாரணைக் குழுவுக்கு டிஐஜி அளவிலான அதிகாரி ஒருவர் தலைமை தாங்குவார் என்றும் தெரிவித்தார். 

மேலும் இந்த குழு ஆய்வு செய்து அடுத்த 10 நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

நள்ளிரவு 1 மணி வரை 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

SCROLL FOR NEXT