இந்தியா

உச்ச நீதிமன்றத்துக்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்!

DIN

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மூன்று பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மற்றும் குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா ஆகிய முவரும் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பை மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ட்விட்டரில் வெளியிட்டாா்.

மூன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி அவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு நவம்பர் 6-ஆம் தேதி கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது.

இந்த மூன்று நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக முறைப்படி பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக அதிகரிக்கும். உச்சநீதிமன்றம் அதன் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையான 34 நீதிபதிகளுடன் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் மா்ம மரணம்

சம்வத்ஸரா அபிஷேகம்

ஹஜ் யாத்ரிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் செயல்பட கோரி கையொப்ப இயக்கம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT