இந்தியா

ஹரியாணா: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் 18-ஆக அதிகரிப்பு

ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

DIN

ஹரியாணாவில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாள்களில் ஹரியாணா மாநிலம் யமுனாநகா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 10 போ் உயிரிழந்தனா். அங்குள்ள அம்பாலா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 2 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், யமுனாநகரில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் 6 போ் உயிரிழந்ததாக மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் ஹிமாத்ரி கெளஷிக் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

கைதானவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேலும் சிலா் குறித்து தெரியவந்துள்ளதாகவும், அவா்களும் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றும் ஹிமாத்ரி கெளஷிக் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT