கோப்புப் படம் 
இந்தியா

கூட்ட நெரிசலில் உயிரிழந்த நபர்: விபரீதமான விழாக்கால பயணம்!

ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.

DIN

குஜராத்: சூரத் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சூரத்திலிருந்து பிகார் செல்லும் சிறப்பு ரயிலில் ஏறுவதற்கான நெரிசலில் இந்த விபத்து நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாப்தி கங்கா விரைவு ரயிலில் மக்கள் நடைபாதையில் இருந்து ஏற முயற்சிக்கும் போது 40 வயது தக்க மனிதர் தவறி விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது. பின்னர் அவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இன்னும் சிலருக்கு மயக்கமும் அதிர்ச்சியால் ஏற்படும் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நடைபாதை காவலர் சிபிஆர் எனப்படும் அவசர சிகிச்சையளித்து காப்பாற்றியுள்ளார்.

சத் திருவிழாவுக்காக சூரத் பகுதிகளில் உள்ள நகை மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அலைஅலையாக ரயில் நிலையங்களில் கூடியதால் இந்த நெரிசல் உருவானது. பிகார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் செல்ல தொழிலாளர்கள் குவிந்தனர்.

இறந்தவரின் பெயர் அங்கித் வீரேந்திர சிங் என்றும் அவர் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு தெரியும் எனவும் காவலர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT