இந்தியா

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைக் காப்பியடித்துள்ளது பாஜக: கமல்நாத் விமர்சனம்!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக நகலெடுத்துள்ளதாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார். 

DIN

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பாஜக நகலெடுத்துள்ளதாக மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத் விமர்சித்துள்ளார். 

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து ஞாயிற்றுக்கிழமை பேசிய கமல்நாத், “தேர்தலின் கடைசி கட்டத்தில் பாஜகவினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அவர்களுக்கு சொந்தமாக எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இல்லை, காங்கிரஸ் செய்வதை அப்படியே நகல் எடுத்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். 

முன்னதாக, நவம்.11 அன்று போபாலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்துதல், அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் இலவச ரேஷன் வழங்குதல், மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் வழங்குதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

இதுகுறித்து பேசிய பாஜக பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா, “பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது. குறிப்பாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை உறுதி செய்யப்படும்.” என்று கூறினார். 

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு நவம்பர் 17-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 114 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைத்தது. பாஜக 109 தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்தது. அதன்பின் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவிற்கு வந்தநிலையில் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT