இந்தியா

தில்லியில் துப்பாக்கிச் சூடு - தாய், மகள் காயம்!

தில்லியில் திடீரென நடந்த துப்பாக்கிச்சூட்டில் தாயும் மகளும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

DIN

தில்லியின் கேரா கலான் பகுதியில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் தாயும் மகளும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஞாயிற்றுக் கிழமை கேரா கலான் பகுதியில்  இரண்டு பெண்கள் சுடப்பட்டதாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குண்டடிபட்ட இரண்டு பேரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவருக்கும் கை மற்றும் கால்களில் குண்டடி ஏற்பட்டிருந்தது. 

பாதிக்கப்பட்ட பின்கி (22) மற்றும் அவரது தாயார் ராக்கேஷ் தேவி (45) மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். 

இந்தக் குற்றத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரிவு 307 (கொலை முயற்சி)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டுவருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT