இந்தியா

ம.பி.க்கு காங்கிரஸ் செய்தது என்ன? அமித் ஷா கேள்வி!

DIN

மத்தியப் பிரதேசத்திற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என உள் துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில்  நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்தியப் பிரதேசத்திற்கு காங்கிரஸ் கட்சி எந்த நல்லதையும் செய்யவில்லை. சோனியா - மன்மோகன் ஆட்சி 10 ஆண்டுகளுக்கு இருந்தது. அப்போது மத்தியப் பிரதேசத்திற்கு அவர்கள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? கடந்த 15 நாள்களாக இந்த கேள்வியை முன்வைக்கிறேன்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத்திடம் இதற்கு பதில் இல்லை. 2004 - 2014 காலகட்டத்தில் மத்தியப் பிரதேசத்துக்கு 2 லட்சம் கோடி காங்கிரஸ் ஒதுக்கியிருந்தது. 2014 -2023 வரை மத்தியப் பிரதேசத்துக்காக பாஜக 6.35 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இதுமட்டுமின்றி 5 லட்சம் கோடி நெடுஞ்சாலைக்காக ஒதுக்கியுள்ளது. அதோடு மட்டுமின்றி மெட்ரோ ரயில், ரயில் நிலைய மேம்பாடு, விமான நிலையங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை பாஜக கொண்டுவந்துள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா அணியின் உரிமையாளரைப் புகழ்ந்த வருண் சக்கரவர்த்தி; எதற்காக தெரியுமா?

குறைவான தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

சிறையிலிருந்து வெளியே வந்தார் கேஜரிவால்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த காலின் முன்ரோ; காரணம் என்ன?

சிஎஸ்கே பந்துவீச்சு; அணியில் மீண்டும் ரச்சின் ரவீந்திரா!

SCROLL FOR NEXT