இந்தியா

ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு

DIN

ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் புதன்கிழமை கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ட்ருங்கல்-அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 36 போ் உயிரிழந்தனா். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 லட்சமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்!

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

ஸ்லோவாகியா பிரதமர் நிலை கவலைக்கிடம்: ஐரோப்பிய தேர்தலில் அதிர்வு ஏற்படுத்துமா?

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

SCROLL FOR NEXT