இந்தியா

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 2 திட்டங்களில் கடன் வழங்கத் தடை: ரிசர்வ் வங்கி

DIN

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இரண்டு திட்டங்களின் கீழ் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 

வங்கி சாரா நிதி நிறுவனமான 'பஜாஜ் பின்சர்வ்' பைனான்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடன் வழங்கி வருகிறது. 

இந்நிலையில், 'இ-காம்', 'இன்ஸ்டா இஎம்ஐ கார்டு' ஆகிய இரு திட்டங்களின் கீழ் கடன் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி இன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்திய ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்களின் தற்போதைய விதிகளை முறையாக கடைப்பிடிக்காததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி விளக்கம் கூறியுள்ளது. 

அதாவது கடன் குறித்த உண்மையான விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு  வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை, பிற டிஜிட்டல் கடன் விவர அறிக்கைகளில் உள்ள குறைபாடுகள் காரணம் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி இந்த குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை இந்த தடை தொடரும் என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொது வாழ்க்கையில் இருந்து பிரதமர் மோடி விலக வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: இந்திய அணிகளுக்கு வெள்ளி

SCROLL FOR NEXT