அமெரிக்காவின் கலிபோா்னியா மாகாணம் உட்சைட் நகரில் சந்தித்த அமெரிக்க அதிபா் பைடன், சீன அதிபா் ஜின்பிங். 
இந்தியா

ராணுவங்களிடையே மீண்டும் தகவல்தொடா்பு: பைடன்-ஜின்பிங் ஒப்புதல்

இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மீண்டும் தகவல்தொடா்பை ஏற்படுத்தவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்புடன் செயல்படவும் அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஒப்புதல் தெரிவித்தனா்.

DIN

இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மீண்டும் தகவல்தொடா்பை ஏற்படுத்தவும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்புடன் செயல்படவும் அமெரிக்க அதிபா் ஜோ பைடன், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஒப்புதல் தெரிவித்தனா்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபா் ஷி ஜின்பிங், அதிபா் பைடனைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்தச் சந்திப்பின்போது பிராந்திய மற்றும் சா்வதேச பிரச்னைகள் குறித்து இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது.

தைவான் தொடா்பான அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து அதிபா் ஜின்பிங் கவலை தெரிவித்ததாக சீன அரசு ஊடகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இரு தலைவா்களும் சந்தித்துக் கொண்ட நிலையில், ஓராண்டுக்குப் பிறகு இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்.

இந்நிலையில், செய்தியாளா்கள் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு சீன அதிபா் ஜின்பிங் ‘ஒரு சா்வாதிகாரி’ என்று பைடன் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

சண்டீகரில் பணம் மோசடி வழக்கு: தேடப்பட்ட கோவை குற்றவாளி கரூரில் சிபிஐ போலீஸாரால் கைது

நான் கூலியில் நடிக்க ஒரே காரணம் இதுதான்: ஆமிர் கான்

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

SCROLL FOR NEXT