குடும்பத்தினருடன் வாக்களித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான். 
இந்தியா

குடும்பத்தினருடன் வாக்களித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை  புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

DIN

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை  புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். 

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (நவ. 17) காலை பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று தோ்தல் நடைபெறுகிறது. மொத்தம் 2,533 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை  புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மனைவி மற்றும் மகன்களுடன் குடும்பத்துடன் வந்து வாக்கினைப் பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'முதல்வர் பதவி எனக்கு முக்கியமானது அல்ல. அது கட்சிதான் முடிவு செய்யும். மத்திய பிரதேச மாநிலமும் இந்த நாடும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய வரலாற்று வெற்றியை அடையும். காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறாது. அவர்கள் பதவிக்கு வந்தால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது. 

மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பாஜகவுக்கு மக்களின் அன்பும் ஆதரவும் உள்ளது' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT