இந்தியா

புதுச்சேரியில் சமூக நல அமைப்பினர் பக்கோடா சுடும் நூதன போராட்டம்

புதுச்சேரி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் வயது வரம்பை தளர்த்தி புதுவை பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக நல அமைப்பினர் பக்கோடா சுடும் நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈட

DIN

புதுச்சேரி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் வயது வரம்பை தளர்த்தி புதுவை பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தி சமூக நல அமைப்பினர் பக்கோடா சுடும் நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

புதுச்சேரி கல்வித்துறையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். அப்படி நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் அந்த வயது வரம்பில் இரண்டு வருடங்கள் தளர்வு கோரி சமூக நல அமைப்பினர் முதல்வரிடம் மனு அளித்துள்ளனர்.

இதனையடுத்து பள்ளிக்கல்வி இயக்குநராக அலுவலகத்தின் முன்பு கோரிக்கையை வலியுறுத்தும் முகமாக புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை மற்றும் தமிழர் களம் ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பக்கோடா சுட்டு நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் வயது வரம்பை தளர்த்தி புதுவை பட்டதாரிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கோஷமிட்டனர். 

ஆர்ப்பாட்டத்தை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT