முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் 19.65 சதவீத வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 27.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:22 AM
சத்தீஸ்கரில்...
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் 19.65 சதவீத வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 27.62 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு கடந்த நவ. 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று(நவ. 17) காலை வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதேபோல, பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக இன்று தோ்தல் நடைபெற்று வருகிறது. 

காலை 11 மணி நிலவரப்படி இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, சத்தீஸ்கரில் 19.65 சதவீத வாக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 27.62  சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

முழு கட்டுரையைப் படிக்க →