இந்தியா

நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் பெட்ரோல் விலை அதிகம்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

DIN

நாட்டிலேயே ராஜஸ்தானில்தான் பெட்ரோல் விலை அதிகம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் ஜெய்ப்பூரில் கூறியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளில் ராஜஸ்தான் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீது ரூ. 35,975 கோடி வரி வசூலித்துள்ளது. ராஜஸ்தானில் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வரி வசூலை ஒப்பிடும் போது, ​​இது மிக அதிகம். ஏனெனில் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு விதித்துள்ள வரிகள்.
இன்று நாடு முழுவதும் பெட்ரோலின் சராசரி விலை ரூ.96.72, ஆனால் ராஜஸ்தானில் உள்ள கங்காநகரில் ரூ.113.34 என்றார். பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு அதிக வரி விதிப்பதாக முதல்வர் அசோக் கெலாட் கூறியது குறித்து அவர் தெரிவிக்கையில், முதல்வர் தனது சொந்த விவகாரங்களை கவனிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.  
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 3-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT