இந்தியா

ஐந்து மாநில தேர்தல்: ரூ.1760 கோடி மதிப்பிலான பரிசுகள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல்!

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பரிசு பொருட்கள், மது, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

DIN

தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் ரூ.1760 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் தெலங்கானா மற்றும்  ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் தேதிகள் அக்டோபர் 9 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. 

தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தற்போது வரை பல்வேறு அரசியல் கட்சிகளால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1760 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்கள், பணம் ஆகியவை தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தத் தகவலை இந்தியத் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. இந்த ஐந்து மாநிலங்களில் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது ரூ.239 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதைவிட இந்தத் தேர்தலில் 7 மடங்கு அதிகமாக பரிசுப் பொருட்கள், மது, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT