உ.பி.: மின்விசிறி அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலி
உத்திரப் பிரதேசத்தில் மின்விசிறி அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தில் மின்விசிறி அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 குழந்தைகள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், பாரசக்வார் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார் சரோஜ் வீட்டில் மின்விசிறி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது மின்சாரம் தாக்கியதில் நான்கு குழந்தைகள் பலியாகினர்.
Advertisement
Advertisement
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான குழந்தைகள் மயங்க், ஹிமான்ஷி, ஹிமாங்க் மற்றும் மான்சி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கியதே உயிரிழப்புக்கு காரணம் என வட்ட அலுவலர் குமார் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "ஃபராட்டா" மின்விசிறிக்கு அருகே குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.