கோப்புப்படம் 
இந்தியா

இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணமா? ஐசிஎம்ஆர் விளக்கம்!

இந்தியாவில் அதிகரித்துள்ள இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

DIN

இந்தியாவில் அதிகரித்துள்ள இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைபிடிக்கும் பழக்கம், மது அருந்துதல், போதைப் பழக்கம் போன்ற காரணிகளால் தான் இந்திய இளையர்களின் திடீர் மரணத்துக்கு காரணமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு இந்திய இளைஞர்களின் காரணமில்லா இறப்புகளின் அறிக்கைகளைக் கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு, இந்தியா முழுவதும் உள்ள 47 மருத்துவமனைகளில் இருந்து 18-45 வயதுடைய 729 நபர்களின் இறப்பு தொடர்புடைய காரணிகளை அடிப்படையாக நடத்தப்பட்டது.

ஆய்வின் முடிவில் கரோனா தடுப்பூசியானது, இந்தியாவில் உள்ள இளம் வயதினரின் காரணமில்லாத திடீர் மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மாற்றாக, "வாழ்க்கை முறை, குடும்ப உடல்நல வரலாறு போன்ற காரணங்களால் இளம் வயதினரின் திடீர் மரணத்தின் வாய்ப்பை அதிகரித்தன" என்று அவர்கள் அந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவித்தனர்.

மேலும், இளம் வயதினரின் காரணமில்லா திடீர் மரணத்தின் அபாயத்தை கரோனா தடுப்பூசி குறைத்துள்ளது என்பதை தற்போதைய ஆய்வு நிரூபிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வந்ததே மகிழ்ச்சிதான்: தொல். திருமாவளவன்

ஃபயர்... அனசுயா!

ரெப்கோ வங்கியில் மார்க்கெட்டிங் அசோசியேட் பணிகள்

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

SCROLL FOR NEXT