ராஜஸ்தான் காங். தேர்தல் அறிக்கை 
இந்தியா

வட்டியில்லா கடன்; ரூ.400-க்கு சிலிண்டர்: ராஜஸ்தான் காங். தேர்தல் அறிக்கை

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

DIN

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவி வருகின்றது.

தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இணைந்து இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், முக்கிய வாக்குறுதிகளாக விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரை வட்டியில்லா கடன், சமையல் எரிவாயு ரூ. 400, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசுப் பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 4 லட்சம் அரசு வேலைகள், 10 லட்சம் வேலைவாய்ப்புகள், சிரஞ்சீவி காப்பீட்டு திட்டத்தின் தொகை ரூ. 50 லட்சமாக உயர்வு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT